மதுரை மாவட்டத்தில்உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் இந்து நட்டாத்தி நாடார் உறவின் முறை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி வாளாகத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமினை உசிலம்பட்டி தி மு க நகர செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் துவக்கி வைத்தார். நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் க. பரமசிவம் உசிலம்பட்டியில் இருக்கும் சத்திரியர் குல சிவகாசி நாடார்கள் முருகன் முறை தலைவர் டி..ஆர். எம். எஸ். மாணிக்கம் தி.மு.க நிர்வாகிகள் வி. குபேந்திரன், கல்யாணி நகர மன்ற உறுப்பினர் கே.எஸ். வீரமணி நட்டாத்தி நாடார் உறவின்முறை பெரியவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்டனர்.இலவச மருத்துவ முகாமிற்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் எம். ஹரி, டாக்டர் ஏ. அமர்நாத் தலைமையில் மருத்துவக் குழுவினர்கள் பொது மக்களுக்கு இரத்தப் பரிசோதனை, இ .சி. ஜி, மற்றும் கண் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரை வழங்கப்பட்டது.


You must be logged in to post a comment.