செக்கானூரணி பகுதியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாசனத்திற்காக நீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் பன்னியான் கொக்குளம் அருகே விரிவாக்க கால்வாயில் மூன்று கண்மாய்கள் செல்லும் வகையில் நீர் திறக்கப்பட்டது. 350 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் செக்கானூரணி ஊர்குளம்கண்மாய் புளியங்குளம் கோரைக்கண்மாய், கிண்ணிமங்கலம் கீழ்க்கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு சுமார் ஒன்பது கிலோமீட்டர் நீளம் பயணம் செய்து தண்ணீர் பாசன வசதி பெறுகிறது. ஷட்டரை இயக்கி திருமங்கலம் நீர் பாசன கோட்ட தலைவர் எம் பி ராமன் திறந்து வைத்தார். ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஜெயக்குமார் நீர்ப்பாசனத் துறை பணியாளர் குபேந்திரன் முன்னிலை வகித்தனர். புளியங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி தருமர் கிராம பெரியவர்கள் ஜெயபால், மாவட்ட விவசாய அணி அய்யாக்கண்ணு பாண்டியராஜன் பொறியாளர் பிரபாகரன் கரகம்பாடி பால்ராஜ் ஜெயபாண்டி செந்தில்குமார் மாரியப்பன் சாமியப்பன் முருகன் அர்ச்சுனன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!