சோழவந்தான் அருகே திருவாலவாய நல்லூர் கிராமத்தில் 32,000 ருத்ராட்சம் மூலம் செய்யப்பட்ட லிங்கேஸ்வரர் சிலை திருவண்ணாமலை பிரதிஷ்டைக்காக பயணம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயல்லூர் கிராமத்தில் ஞானகுரு குருகுலத்தில் 32,000 மூலம் செய்யப்பட்ட சுமார் நான்கு அடி உயரம் கொண்ட லிங்கேஸ்வரர் சிலை திருவண்ணாமலையில் உள்ள திருச்சிற்றம்பலம் அன்னதான ஆசிரமத்திற்கு பிரதிஷ்டை செய்ய ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர் மரியாதை உடன் முக்கிய வீதிகளில் வலம் வந்து திருவண்ணாமலை நோக்கி பயணம் சென்றது. ஐயா ஞானகுரு தலைமையில் சிறப்பு தோத்திரப் பாடல்கள் பாடி பஜனை செய்து வழிபாடு மேற்கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் திருவண்ணாமலையில் வழங்கப்படும் அன்னதானத்திற்கு 122 அரிசி மூட்டைகளும் கொண்டு செல்லப்பட்டது. ஏற்பாடுகளை திருச்சிற்றம்பலம் அன்னதான குழு செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!