மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சார்பாக அகல்விளக்கு இணைய வழி குற்றங்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது தலைமை ஆசிரியை தீபா தலைமை வகித்தார் பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி உறுப்பினர் சத்திய பிரகாஷ் சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் சுபாஷினி வரவேற்றார் ஆசிரியர் ஜெர்லின் தெரசா நன்றி கூறினார். மாணவிகள் இணைய வழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகளை கையில் ஏந்தி பள்ளியில் இருந்து ஊர்வலம் கிளம்பி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பள்ளியில் நிறைவுற்றது. பள்ளி வளாகத்தில் ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் காவல்துறை ஆகியோர் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


You must be logged in to post a comment.