சோழவந்தானில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளருக்கு புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத் திறப்பு விழாவிற்கு ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். ஜெனக நாராயண பெருமாள் கோவில் செயல் அலுவலர் தாரணி ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் இளமதி தென்கரை மூலநாத சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி முன்னிலை வகித்தனர். எழுத்தர் முரளி வரவேற்றார். பாலாஜி பட்டர், பார்த்தசாரதி, சண்முகவேல் சிறப்பு யாகங்களை நடத்தினர். இதில் கணக்கர் பூபதி, கவிதா, வசந்த், பிரியா மற்றும் ஆலய பணியாளர்கள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!