-மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே தமிழக துணை முதல்வர், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் உதய நிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா உசிலம்பட்டி நகர தி மு க சார்பில் நடைபெற்றது.
தமிழக துணை முதல்வர் மற்றும் இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி தி மு க நகர செயலாளர் எஸ். ஓ. ஆர். தங்கப்பாண்டியன் தலைமையில் நகர அவைத் தலைவர் சின்னன் நகரத் துணைச் செயலாளர்கள் உதய பாஸ்கரன், தேவி ரமேஷ், அழகர், நகரப் பிரதிநிதிகள் ஜெயபிரகாஷ், மகாலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் குபேந்திரன், கல்யாணி, டி. சி. கணேசன், சரவெடி சரவணன், பிரபு ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். விழாவில் நகர மன்ற உறுப்பினர்கள் வீரமணி ,முருகன், பிரபாகரன், மதிவாணன், பால்பாண்டி, சிதம்பரம், கனிராஜா பிரவின்நாத் கர்ணன், பொட்டு பாண்டி உசிலம்பட்டி இளைஞர் அணி நகர அமைப்பாளர் சுஜேந்திர நாத் , துணை அமைப்பாளர்கள் மாயா தினேஷ், வேட்டி ஜெயராமன், அருண்குமார், ஜெயக்கனி தமிழரசன், கேசவன், வால்டர் தர்மா மகளிர் அணி நிர்வாகிகள் பிரியா, ராதா, ஈஸ்வரி, கார்த்திகா, பூங்கொடி, சுகன்யா, அபிநயா மற்றும் நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.