மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு விழா நடைபெற்றது. திருக்கோவிலில் விநாயகர் பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது தொடர்ந்து யானை வாகனத்தில் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்து வைகை ஆற்றில் ஆராட்டு விழா நடைபெற்றது. ஐயப்ப பக்தர்கள் புடைசூழ, சரண கோஷம் முழங்க பால் தயிர் வெண்ணெய் நெய் பஞ்சாமிர்தம் மஞ்சள் பொடி மா பொடி சந்தனம் திரவியம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மங்கள ஆரத்தி காட்டப்பட்டது தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் பூத்தூவி வழிபாடு மேற்கொண்டனர். அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யானை வாகனம் மீதேறி தென்கரை கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் திருவீதி உலா வந்து திருக்கோவிலை அடைந்தார். வழிநெடுக ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் பாராட்டு விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது ஏற்பாடுகளை அனைத்து ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.


You must be logged in to post a comment.