மதுரை அலங்காநல்லூர் சிக்கந்தர் சாவடி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட துயர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கணவன்–மனைவி இருவர் உயிரிழந்தனர்.
மதுரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடசுப்பு (56), அவரது மனைவி பத்மாவதி (54) ஆகியோர் மதுரையிலிருந்து அலங்காநல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் சிக்கந்தர் சாவடி அருகே செல்லும் பொழுது நாய் ஒன்று திடீரென சாலைக் குறுக்கே பாய்ந்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சறுக்கி இருவரும் கீழே விழுந்தனர். அந்த நேரத்தில் பின்னால் வந்த அரசு பேருந்து தவிர்க்க முடியாமல் மோதியதால் கணவன்–மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குறுக்கே வந்த நாயும் உயிரிழந்தது.
அலங்காநல்லூர் காவல்துறை விசாரணை. செய்து வருகின்றனர்
தெரு நாய்களால் பல்வேறு விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில் உயிர் சேதங்களும் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் இன்று காலை அலங்காநல்லூர் பகுதியில் தெரு நாய் குறுக்கே வந்ததில் தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அரசு உடனடியாக தீவிர கவனம் செலுத்தி தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஈஸ்வரன் சோழவந்தான்


You must be logged in to post a comment.