பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதன் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ வுமான கதிரவன் தலைமையில் நடைபெற்றது.,

இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கதிரவன்.,

கூட்டணி அமைப்பது யாருடன் அமைப்பது என ஒரு குழு அமைத்து அவர்கள் அளித்த அறிக்கையின்படி, முக்கியமான தீர்மானமாக வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி வைத்து, சட்டமன்ற தேர்தலை சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.,

எங்களை பெறுத்தமட்டில் இதுவரை பாஜகவோடு கூட்டணி இல்லை, இந்திய அளவில் பாஜகவை நாங்கள் ஆதரிக்கவில்லை.,

எஸ்.ஐ.ஆர்-யை பொறுத்த மட்டில் இந்த கால கட்டத்தில் சிறப்பு சீர்த்திருத்தம் செய்து விடுவீர்கள் என்றால் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது, நடக்குமா என்பது கேள்விகுறி.,

அதிமுக எஸ்.ஐ.ஆர் – யை ஏற்றுக் கொண்டுள்ளது குறித்த கேள்விக்கு கருத்துக்கள் வேறுபாடு இருக்கலாம், தேர்தல் கூட்டணி வேறு, தேர்தல் கூட்டணிக்காக வந்தால் நாங்கள் அடிமை இல்லை., இது அரசியல்.,

டிடிவி என்றுமே அதிமுகவோடு செல்ல மாட்டார், ஒபிஎஸ் அதிமுகவுடன் இணைவதற்கு பாஜக முயற்சி எடுக்கிறார்கள், ஒபிஎஸ்-யும் முயற்சி எடுக்கிறார் அப்படி வந்தால் நல்லது.,

நிச்சயமாக டிடிவி அதிமுகவிற்கு வர மாட்டார்., அதிமுக என்டிஏ கூட்டணிக்கு வர வேண்டும் என சொன்னவர் டிடிவி, அதிமுக என்டிஏ கூட்டணிக்கு வந்ததும் அந்த கூட்டணியை விட்டு டிடிவி போய்விட்டார்., டிடிவி நிலைப்பாடு என்ன தமிழக மக்களை கேனயனாக ஆக்க முடியாது, நீங்கள் நினைத்தால் நீங்கள் அப்படி ஆகிவிடுவீர்கள்.,

தவெக அழைத்தால் செல்ல வாய்ப்பு உண்டா என்ற கேள்விக்கு, அவர்கள் ஸ்டைலில் அரசியல் செய்கின்றார்கள், நாங்கள் இந்திய அளவில் அரசியல் செய்கிறோம்., என பேட்டியளித்தார்.,

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!