மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி இந்திய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தை மாநில துணை அமைப்புச் செயலாளர் மற்றும் உசிலம்பட்டி சட்ட மன்ற தொகுதி மாவட்ட தலைவர் .பிரபு ராஜா தலைமையில் மாவட்ட பொருளாளர் வினோத் குமார் முன்னிலையில் மாவட்டத் துணைச் செயலாளர் காளிராஜ் வரவேற்று பேசி மாவட்ட இணை தலைவர் மனோகரன் நன்றி உரை கூறினார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, மாவட்ட மகளிர் அணி செயலாளர் மகாலட்சுமி, மாவட்ட இணை தலைவர் நதியா, மாவட்ட கலைத்துறை பிரிவு அணி செயலாளர் செல்லம் கருப்பு, மாவட்ட கலைத்துறை அணி துணைச் செயலாளர் ஆத்தாடி குமரன், உசிலம்பட்டி நகர தலைவர் பழனி, செயலாளர் கார்த்திக், துணைத் தலைவர் பாண்டித்துரை, உசிலம்பட்டி தெற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பசுபதி, உசிலை நகர துணைத் தலைவர் விஜயன், உசிலை வடக்கு ஒன்றிய தலைவர் செல்லப்பாண்டி, உசிலை நகர கலைத்துறை பிரிவு அணி செயலாளர் கார்த்திகை தீபா, உசிலை வடக்கு ஒன்றிய கலைத்துறை பிரிவு அணி செயலாளர் முத்துசாமி மற்றும் புதிய நிர்வாகிகளும் 35 பேருக்கு மேல் நிர்வாகிகள் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகள் பற்றியும் கட்சியின் வளர்ச்சிக்கு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், புதிய பொறுப்பாளர்கள் நியமிப்பது சம்பந்தமாகவும், பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமாகவும் பேசி முடிவெடுக்கப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இந்திய ஜனநாயக கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் அன்னை இருதயராஜ் சிறப்புரையாற்றி கலந்து கொண்ட பொறுப்பாளர்களை உற்சாகப்படுத்தினார். உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் அவரை வரவேற்று பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். மேலும் அவரது இல்ல விழாவிற்கு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கு பத்திரிக்கை கொடுத்து அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தெரியப்படுத்தினார். மேலும் புதிதாக இணைந்த நிர்வாகிகளுக்கு இந்திய ஜனநாயக கட்சி துண்டு வழங்கப்பட்டது.


You must be logged in to post a comment.