மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட கோரி உசிலம்பட்டியில் பார்வட் ப்ளாக் அமைப்பினர் தொடர் சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட கோரி பார்வட் ப்ளாக் அமைப்பினர் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.,
இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி தேவர் சிலை வளாகத்தில் பாரதிய பார்வட் ப்ளாக் தலைவர் முருகன்ஜி சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டார், அவருக்கு ஆதரவாக அகில இந்திய பார்வட் ப்ளாக், மூவேந்தர் முன்னேற்ற கழகம் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.,
தேவர் சிலை முன்பு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி முன்பு உள்ள காலி இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,
தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 100 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.,
மேலும் உசிலம்பட்டி வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வருவாய்த்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வட் ப்ளாக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இறுதியில் முருகன் ஜி கைது செய்யப்பட்டார்


You must be logged in to post a comment.