.மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2025 எஸ் ஐ ஆர் குறித்த ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி அருகே ஜெ.ஜெ. மஹாலில் நடைபெற்றது.
உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் பி நீதிபதி, முன்னாள் எம் எல் ஏ க்கள் இ. மகேந்திரன் க. தவசி எஸ். எஸ். சரவணன் உசிலம்பட்டி நகர செயலாளர் பூமா ராஜா செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா சேடபட்டி ஒன்றிய செயலாளர் பிச்சை ராசன் ஏழுமலை பேரூர் செயலாளர் வாசிமலை ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநில அம்மா பேரவை செயலாளர் துரைதன ராஜன் மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திர பாண்டி, சுதாகரன் மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணி வழக்கறிஞர் லட்சுமணன் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி பாக முகவர்கள் மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக கட்சியினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.