மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முள்ளிப்பள்ளம் கிளைச் செயலாளர் கேபிள் ராஜா வரவேற்றார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் மேலக்கால் சுப்பிரமணி தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன் மாறன் பாக முகவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய துணைச் செயலாளர் பெரியகருப்பன் ராஜா ,ஊத்துக்குளி ராஜாராமன் சிறுமணி மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக கிளைச்செயலாளர்கள் பாக முகவர்கள், பூத் கமிட்டியாளர்கள், பூத் டிஜிட்டல் கமிட்டியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

