சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் கொள்முதல் செய்யாததால் 2000 மூட்டைகள் தேக்கம்

சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் கொள்முதல் செய்யாததால் 2000 மூட்டைகள் தேக்கம் அறுவடைக்கு தயாராக உள்ள நெற் கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாததால் பல்லாயிரம் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர் இந்த நிலையில் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் தற்போது அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யாமல் 2000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது அதிகாரிகள் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் கருப்பட்டி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் நடவு செய்து தற்போது அறுவடை நடைபெற்று வரும் நிலையில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் காரணமாக அறுவடை பணிகளில் தொய்வு ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர் மத்திய குழு கடந்த வாரம் வாடிப்பட்டி அருகே கட்ட குளம் ஆண்டிபட்டி போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் நெல்லில் ஈரப்பதம் அதிகரிக்காதவாறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி சென்ற நிலையில் ஒரு வாரத்திற்கு மேலாக பல்வேறு பகுதிகளில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன அதிகாரிகள் மற்றும் கொள்முதல் நிலையங்களை நடத்தும் ஆளுங்கட்சியினர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது நெல் மூட்டைகள் தேங்குவதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!