மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நடத்தும் விவசாயிகள் உரிமை மீட்பு மற்றும் கடன் விடுதலை மாநாடு வருகின்ற டிசம்பர் 28 ஈரோட்டில் நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இம்மாநாட்டில் கோரிக்கையாக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளிலும் பெற்றுள்ள அனைத்து பயிர் கடன்கள் நீண்ட கால மத்திய கால விவசாய கடன்கள் டிராக்டர் கடன்கள் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்
தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் உற்பத்தி மானியமாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்
தென்னை பனையில் இருந்து கள் இறக்கி விற்க விதித்துள்ள தடை நீக்க வேண்டும்
நிலக்கடலை தேங்காய் நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக விற்பனை செய்ய வேண்டும்.
உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் நீர்மட்டத்தின் மதகின் உயரத்தை குறைத்து நிரந்தர நீர் திறப்பதற்கு அரசாணை வேண்டியும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநாடு நடைபெறுகிறது.
இந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆலோசனைக் கூட்டத்திற்கு நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருக சாமி தமிழ்நாடு கோழிப் பண்ணை ஒருங்கிணைப்பாளர் ஏ பி டி மகாலிங்கம் மாநிலத் துணைத் தலைவர் ஆர் உதயகுமார் மாநில அமைப்புச் செயலாளர் சி நேதாஜி மாவட்ட அவைத் தலைவர் பி தமிழ்செல்வன் மாவட்ட செயலாளர் காராமணி மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என் ஆர் திருப்பதி மாவட்ட இளைஞரணி ராஜேஸ்வரன் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சின்ன யோசனை வழக்கறிஞர் போஸ் சுஜித் செல்லையா மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

