மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி நாராயணபுரம் மலைப்பட்டி மேலமட்டையான் ஆகிய கிராமங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்களில் மழை நீர் தேங்கி வடியாமல் இருந்தது இதுகுறித்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர் ஆனால் மழை நீர் வெளியேறாததால் நெல் பயிர்களில் வேர்களில் மழை நீர் தேங்கி வேர் அழுகத் தொடங்கியது இதன் காரணமாக நடவு செய்து 30 நாட்கள் ஆன நெற் பயிர்களின் வேர்கள் அழுகிய நிலையில் பச்சை நிறத்தில் இருந்து செம்பட்டை நிறத்திற்கு மாறத் தொடங்கியது இதனால் இந்த பகுதியில் உள்ள பழையக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பாக நாராயணபுரம் கிராமத்தில் ராஜன் என்பவரது 10 ஏக்கர் விவசாய நிலத்தில் மழை நீர் வெளியேறாததால் வேர் அழுகி செம்பட்டை நோய் தாக்கி இருப்பதாக கூறுகிறார் மேலும் இரண்டு தினங்களில் இதற்கான மருந்து அடித்து காப்பாற்ற முயற்சி எடுப்பதாகவும் முடியாத பட்சத்தில் 10 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதம் அடைவதுடன் இதனால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என வேதனையுடன் தெரிவிக்கின்றார் ஆகையால் வேளாண்மை துறை அதிகாரிகள் தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு நெற்பயிர்களை தாக்கியுள்ள நோய்களுக்கு உரிய மருந்து அடிக்க விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் மேலும் வருவாய்த்துறையினர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசிடம் நிவாரணத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









