மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வத்தலகுண்டு ரோட்டில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில துணை அமைப்புச் செயலாளரும், மாவட்ட தலைவருமான பிரபுராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வினோத் குமார், மாவட்ட துணைத்தலைவர் மகாராஜன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பாடுபடுவது குறித்தும்,பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், தேர்தலில் வெற்றிக்கு எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
இ

க்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் காளி ராஜ். மாவட்ட துணைத் தலைவர் மகேந்திரன். உசிலை நகரத் துணைத் தலைவர் விஜயன். உசிலை வடக்கு ஒன்றிய தலைவர் செல்லப்பாண்டி. உசிலை நகரச் செயலாளர் கார்த்திக். மாவட்டத் துணைத் தலைவர் மாரிமுத்து. செல்லம்பட்டி ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர் குமார் தேவன். செல்லம்பட்டி ஒன்றிய துணை இளைஞரணி செயலாளர் ரகுவரன். மாவட்ட சட்ட ஆலோசகர் அன்பரசன். மாவட்ட மகளிர் அணி செயலாளர் மகாலட்சுமி. வடக்கு ஒன்றிய மீனவர் அணி செயலாளர் மல்லிகா. வடக்கு ஒன்றிய காலை துறை பிரிவு செயலாளர் கார்த்திகா. மாவட்ட கலைத்துறை பிரிவு செயலாளர் ஆத்தாடி குமரன். உசிலம்பட்டி நகர ஊடக பிரிவு செயலாளர் பொன்னுச்சாமி. தெற்கு ஒன்றிய செயலாளர் பேயதேவர். உசிலம்பட்டி நகர துணை மகளிர் அணி செயலாளர் கார்த்திகை தீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

