மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பல்வேறு கட்சியினரும், பல்வேறு அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாகஉசிலம்பட்டி தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை மாநில தலைவர் இராஜா பாண்டியன் டாக்டர் ஜெபமணி தலைமையில் குருநாதன் வீரணன் பூங்கொடி கள்ளிப்பட்டி தினேஷ் செளந்தரபாண்டி ஆகியோர் கலந்து கொண்டு தேவர் சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.