மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத
ஸ்வாமி திருக்கோவிலில் 14 ஆம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த வாரம் புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது தொடர்ந்து தினந்தோறும் வள்ளி தேவசேனா முருகப்பெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்தன. பக்தர்களின் விண்ணத்திறும் கோஷத்துடன் சூரசம்காரம் நடைபெற்றது தொடர்ந்து. முருகப்பெருமான் ஸ்ரீ வள்ளி தேவசேனா திருக்கல்யாணம் நடைபெற்றது. கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தேவசேனா முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது தொடர்ந்து மாலை மாற்றுதல் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கமிட்டியாளர்கள் திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் திருவேடகம் ஏலவார்குழலி உடனுறை ஏடகநாத சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது சண்முகருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்று பாவாடை நெய் வைத்தியம் முடிந்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணமும் இரவு சுவாமி திருவிதி உலாவும் நடைபெற்றது திருவேடகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

