மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிரப்பு கிராமத்தை சேர்ந்த மணி இவர் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் வாடிப்பட்டியில் குடியிருந்து வருகிறார் பணி நிமித்தமாக சோழவந்தான் வந்துவிட்டு திரும்பி வீட்டிற்கு சென்ற போது சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் நாகம்மாள் கோவில் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் இருசக்கர வாகன விபத்தில் இளம் புகைப்படக் கலைஞர் உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


You must be logged in to post a comment.