மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம் பி ஆய்வு பணி மேற்கொண்டார்.
இதில் ஆணையாளர் இளவரசன் கவுன்சிலர்கள் 24 வார்டுகளில் உள்ள அடிப்படை வசதிகளை மற்றும் பேருந்து நிலையம் விரிவாக்க பணிகள் வளர்ச்சி பணிகளை குடிநீர், சாக்கடை தெரு விளக்கு வசதிகள் குறித்து ஆய்வுப் பணி மேற்கொண்டார்.
முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக மாவட்ட பிரதிநிதியும்,12வது கவுன்சிலர் ஷோபனாதேவியின் கணவருமான பழனிக்குமார் எழுந்து,
33 கோடியில் ரோடு வேலை நடந்துச்சு. மறுநாளே தண்ணீயில கரைஞ்சு போச்சு. காண்ட்ராக்டிடம் கேட்கவும் முடியல, யார்கிட்டயும் பேச முடியல ,பால்பாண்டி காண்ட்ராக்டர் இந்த பக்கம் ஏழு ரோடு போட்டு இருக்காரு,போட்ட ரோடு இப்ப ஒண்ணுமே இல்ல, 12 வார்டில் நாலு வருஷம் முடியப்போகுது, இன்னும் ஒரு வேலையும் நடக்கல, அப்ப நாங்க தலைமைய ஆதரிச்சதுனால ஓரங்கட்டபடுறமா ,என புகார்களை அடுக்கிக்கொண்டு இருந்தார். இதனைக் கண்ட தங்க தமிழ்ச்செல்வன் எம்பி எதுவும் பேச முடியாமல் இருக்கையில் நெளிந்தார். உடனடியாக அங்கிருந்த திமுக நிர்வாகிகள் அவரை அமைதியாக அமரும் படி கூறினர். இதன் பின் பேசிய எம்பி வார்டின் குறைகளை கூறுங்கள் சரி செய்யப்படும் எனக் கூறி கூட்டத்தை முடித்தார்.
திமுக நிர்வாகியே MPயிடம் பகிரங்கமாக 4 வருடம் தங்கள் வார்டில் ஒரு விளையும் நடக்கவில்லை என குற்றம் சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

