சென்னையில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் மற்றும் திருச்சியில் வழக்கறிஞர் அழகேசன் தாக்கப்பட்டதை கண்டித்தும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் என்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.மேலும் வழக்கறிஞர் சங்க தலைவர் வீர பிரபாகரன் தலைமையில் வழக்கறிஞர்கள் உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து உசிலம்பட்டி தேவர் சிலை அருகே தமிழகத்தில் வழக்கறிஞர் தாக்கப்படுவதை கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


You must be logged in to post a comment.