சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என கூறி பத்துக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம்
சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சியில் கருப்பட்டி கணேசபுரம் பொம்மபன் பட்டி அம்மச்சியாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளது சுமார் 4,000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இந்த நிலையில் கருப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில்
கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர் வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் தொடர்ந்து இந்த பகுதியில் மழை பெய்து வருகிறது இந்த நிலையிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் குடிநீர் வழங்காவிட்டால் கிராம மக்களை ஒன்று திரட்டி பஸ் மறியல் செய்யப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக காலி குடங்களுடன் பெண்கள் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது


You must be logged in to post a comment.