சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மழையால் சேதமடைந்த சாலை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் பேருந்து நிறுத்தப் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலையின் நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் பள்ளி மற்றும் அருகில் வைகை ஆற்று மேம்பாலம் மற்றும் முக்கியமான ஆன்மீக தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கூடும் இடமான சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் மற்றும் மாணவிகள் பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் பல மாதங்களாக உள்ள இந்த பள்ளமானது பருவமழை தொடங்கும் முன்பே சரி செய்ய பொதுமக்கள் தரப்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது ஆனால் அது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளத்தில் மழை நீர் தேங்கி முழங்கால் அளவுa தண்ணீர் தேங்கி நிற்கிறது இந்த நிலையில் காலை மாலை என அரசு பெண்கள் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பள்ளத்தின் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது மேலும் அந்த வழியாகவே முள்ளி ப்பள்ளம் தென்கரை மன்னாடிமங்கலம் குருவித்துறை போன்ற பகுதிக்கும் நாச்சிகுளம் கருப்பட்டி இரும்பாடி கரட்டுப்பட்டி போன்ற பகுதிக்கும் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது இந்த நிலையில் முழங்கால் அளவு பள்ளத்தில் வாகனங்கள் ஏறி இறங்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் பள்ளத்தில் விழுந்து உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அச்சப்படுகின்றனர் ஆகையால் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள இந்த நேரத்தில் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்து விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் உயிர்ச்சேதம் ஏற்படும்முன் நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!