மதுரை மாவட்டம்
சோழவந்தான் பகுதியில் தொடர் கன மழையால் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நீரில் மூழ்கிய நெல் பயிர்கள் வேதனையுடன் விவசாயிகள்…. தமிழ்நாடு அரசு காப்பீடு செய்து நிவாரணம் வழங்க கோரிக்கை.துரை மாவட்டம் சோழவந்தான் பகுதி மதுரை
மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக அழைக்கப்படுகிறது இங்கே முல்லை பெரியார் பாசனம் மூலம் நெல் பயிர்கள் சுமார் 20000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து விடாது மழை பெய்து வருகிறது இதனால் சோழவந்தான் இரும்பாடி கருப்பட்டி அம்மச்சியாபுரம் பொம்பன்பட்டி நாச்சிகுளம் கரட்டுப்பட்டி மேட்டு நீரே தான் கட்டக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி காணப்படுகிறது. தொடர் மழை காரணமாக வைகை அணையில் இருந்து வெளியேறும் நீர் கால்வாய் மூலமாக வாய்க்கால்களில் அதிகளவில் பாய்ந்து வருகிறது . இதனாலும் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பாசன கால்வாய்களை அதிக அளவில் தூர்வாராதது விவசாய நிலங்களில் நீர் தேங்க காரணமாக உள்ளது. இதனால் நெற்பயிர்கள் முழுவதுமாக நனைந்து அழுகும் சூழ்நிலை காணப்படுகிறது.இது குறித்து விவசாயத்துறை அதிகாரிகள் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சேதமடைந்த நெல் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் பாசன கால்வாய்களை முறையாக தூர் வார வேண்டும். என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெருப்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் ஏக்கருக்கு 30,000 முதல் 40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசு உடனடியாக சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்


You must be logged in to post a comment.