மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் 5000 மூடைகளுக்கு மேல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி அழுகி வீணாகும் நிழல்கள் மழைநீரில் நனைந்த நெல்கலை உலர்த்தி காய போடும் விவசாயிகளின் பரிதாப நிலை பல இடங்களில் நெல் முளைத்து காணப்படுவதால் போதிய விலை கிடைக்க வாய்ப்பில்லை என விவசாயிகள் வேதனை அரசு உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்களை குடோன்களுக்கு எடுத்துச் செல்ல அரசுக்கு கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மூன்று போக விளைச்சல் பகுதியாக இருந்தது தற்போது போதிய வருமானம் கிடைக்காதது வேலைக்கு ஆட்கள் கிடைக்காத சூழ்நிலை இடுபொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் இருபோகமாக குறைந்து விட்டது. சில இடங்களில் ஒரு போகம் மட்டுமே விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் கஷ்டப்பட்டு தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சோழவந்தான் கருப்பட்டி இரும்பாடி பொம்மன்பட்டி அம்மச்சியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்
மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் நெல்மணிகள் முளைக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது இதனால் விவசாயிகள் பலத்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் கடந்த இரு தினங்களாக வாடிப்பட்டி வட்டத்தில் தான் அதிக அளவு மழை பெய்துள்ளது விளைவித்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறிப்பாக வாடிப்பட்டி அருகே பொம்மன்பட்டி கிராமத்தில் ஆயிரம் முடைகளுக்கு மேல் நெல் குவிக்கப்பட்டு மழௌயில் நனைந்த நெல்களை உலர வைக்கும் பரிதாப நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் சில இடங்களில் மழை நீரில் நனைந்த நெல் அனைத்தும் முளைத்து காணப்படுகிறது நெல்களில் ஒருவித துர்நாற்றம் வீசுவதால் அதை விற்பனை செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர் உடனடியாக கருப்பட்டி இரும்பாடி பொம்மன்பட்டி போடிநாயக்கன்பட்டி பகுதிகளில் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து நெல்களை குடோன்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


You must be logged in to post a comment.