மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு மூல நாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டுபக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி திருக்கோவிலில் 14 ஆம் ஆண்டு கந்தசஷ்டி பெருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கி மகாபூர்ணாதியுடன் நிறைவுற்ற யாகசாலை பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தேவசேனா முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் பால் தயிர் வெண்ணெய் நெய் சந்தனம் பன்னீர் இளநீர் மஞ்சள் பொடி மா பொடி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை திருக்கோவில் முன்பாக சூரசம்ஹார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ஸ்ரீ முருகப் பெருமான் வள்ளி தேவசேனா திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.


You must be logged in to post a comment.