மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யணார்குளம் கிராமம்.இக்கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி மகன் ரவீந்திரன்.விவசாயி.இவருக்கு சொந்தமான தோட்டம் அய்யணார்குளம் அருகே போடுவார்பட்டி கிராமத்தில் உள்ளது.இதில் வாழை மரங்கள் பயிரிட்டுள்ளார்.இந்நிலையில் ரவீந்திரன் காலையில் வழக்கம் போல தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது கிணற்றிலிருந்த மோட்டார் ஷாட்டர் மற்றும் மின் வயர்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள தோட்டம் என்பதால் இரவினில் மர்hமநபர்கள் மோட்டாரைத்திருடியது தெரிய வந்தது.உடனடியாக இது குறித்து உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலிசார் மோட்டாரை திருடியவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


You must be logged in to post a comment.