மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலரும் தொழிலதிபருமான எம் கே ராஜேஷ் தனது பிறந்தநாளை ஒட்டி வேலை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பேனா பென்சில் நோட்புக் உள்ளிட்டவைகள் மற்றும் கருணை இல்லங்களுக்கு உணவுகள் வழங்கினார் முன்னதாக சோழவந்தானில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழிலதிபர்கள் சமுதாய அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர்அவருக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். சோழவந்தான் பேரூர் திமுக செயலாளர் வார்டு கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், 8வது வார்டு கவுன்சிலர் மருது பாண்டியன் மஞ்சப்பை சேகர் ,தேங்காய் கடை சக்திவேல், ஊத்துக்குளி பார்த்திபன், தமிழக வெற்றி கழகம் செல்லப்பாண்டி, மற்றும் பாஜக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழிலதிபர்கள் நண்பர்கள் உறவினர்கள், பேட்டை சங்கங்கோட்டை ஊத்துக்குளி மேலபச்சேரி மற்றும் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.