மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உசிலை தாலுகா 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில்
58 கால்வாயில் தண்ணீர் திறக்கவும், நிரந்தர அரசாணை பெறவும், மதகின் உயரத்தை குறைக்கவும், கால்வாயில் தண்ணீர் திறக்கும் போது 250 கன அடிக்கு மேல் திறக்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் புதிய நிர்வாகிகளை இணைத்தும், சில நிர்வாகிகளின் பொறுப்புகளை மாற்றி அமைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி சங்கத்தின் புதிய தலைவராக . திருப்பதி ஹோட்டல் உதயகுமார் , துணைத் தலைவராக இலைக் கடை தமிழ்செல்வன் , செயலாளர் ஆக பச்சை துண்டு பெருமாள் , துணைச் செயலாளர் ஆக .ஜான்சன் , பொருளாளராக காட்டு ராஜா , சட்ட ஆலோசகர்களாக ஜெயக்குமார் மற்றும் போஸ் கௌரவத் தலைவர்களாக .சின்ன யோசனை, .பொன். மணிகண்டன், நேதாஜி, லிங்கை .ஒச்சாதேவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


You must be logged in to post a comment.