மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறியிருந்தனர் இதனை அடுத்து கிராமத்தில் முகாமிட்ட அதிகாரிகள் குடிநீர் மேல்நிலைத் தொட்டியை சுத்தம் செய்து கடந்த மூன்று நாட்களாக கிராமத்தில் முகாமிட்டு போர்வெல் பைப் மூலம் புதிய குடிநீர் வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கிராமத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார் அப்போது கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் சுற்று சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாக பொதுமக்கள் கூறினர் மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் குழந்தைகள் 3 கிலோமீட்டர் தூரம் பாதுகாப்பற்ற முறையில் வருவதாகவும் கழிப்பறை வசதிகள் இல்லாததால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதாகவும் நல்ல குடிநீர் இல்லை எனவும் கோரிக்கை வைத்தனர் இதனை அடுத்து கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் பேரூர் முன்னாள் நிர்வாகி பிரகாஷ் ஒன்றிய துணைச் செயலாளர் ஜெகன் விவசாய அணிநாச்சிகுளம் பாஸ்கரன் கதிரேசன் ஒப்பந்ததாரர் சக்கரவர்த்தி
உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்


You must be logged in to post a comment.