
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ,தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மைக்கை வாங்கிய சீமானூத்து பஞ்சாயத்துக்குட்பட்ட நல்லிவீரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் எழுந்து,
எங்களது கிராமத்தில் நியாய விலை கடையில் போடும் ரேஷன் அரிசி யாரும் சாப்பிட முடியாது. எறும்பு கூட திங்காது. ஒருமுறை நீங்கள் சாப்பிட்டு பார்த்தால் தெரியும். எங்களது கஷ்டம். அந்த அரிசியை நாங்கள் தினம் தினம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அதுவும் மாதத்திற்கு ஒருமுறைதான் வழங்கப்படுகிறது. இதை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை.
மேலும் நல்லி வீரன்பட்டி தண்ணீர் தொட்டியில் மேல் ஆலமரம் முளைத்து பெரிய மரமாக உள்ளது .இதை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை ஐந்து வருடமாக சீமானூத்து பஞ்சாயத்தில் எவ்வளவு செலவு பண்ணாங்க என்பது தெரியவில்லை. அரசு பணம் எவ்வளவு செலவாகியது என்பது புரியவில்லை என பேசிக்கொண்டு இருந்தார் அப்போதும் அந்த இளைஞர் கிராம சபை கூட்டம் நடைபெறுவதற்கு வாழைமரம் தோரணம் அவசியமா, யாரு பணம் வீணாகிறது என கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஆட்சியர் அவரை அமைதி படுத்திய மதுரை ஆட்சியர் பிரவீன் குமார் உங்களது கோரிக்கைகளை கேட்பதற்காக தான் உசிலம்பட்டியை தேர்ந்தெடுத்து இங்கு வந்துள்ளேன்.ஒரு மணி நேரமாக உள்ளேன்.உங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என கூறிக்கொண்டு கூட்டத்தை முடித்தார்.
ஆட்சியர் மற்றும் எம்பி முன்னிலையே கடந்த ஐந்து வருடங்களாக கிராமத்திற்கு எதுவும் செய்யவில்லை, ரேஷனில் அரிசி சரியில்லை என இளைஞர் குற்றம் சாட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது


You must be logged in to post a comment.