மதுரை சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் மலம் கலந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டு அங்கிருந்த பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது
மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் மலம் கலந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் கழகபொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டு வர என்னை அனுப்பி வைத்துள்ளார்
இங்குள்ள மக்களை சந்தித்து இதுகுறித்து கேட்டபோது இந்த கிராம மக்களுக்கு புரட்சித் தமிழர் எடப்பாடி யார் முதலமைச்சராக இருக்கும் பொழுது தான் இங்குள்ள சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாணிக்கம் எம்எல்ஏவாக இருந்தபோது இந்த மக்களுக்கு சாலை வசதி செய்யப்பட்டது அதன்பிறகு கடந்த நாலரை ஆண்டுகளுக்கு பிறகு தான் தற்போது குடிநீர் தொட்டி கட்டப்பட்டு அதுவும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது கடந்த சனிக்கிழமை மக்களோட பயன்பாட்டிற்கு குடிநீர் தொட்டி திறக்கப்பட்டதாக கூறுகின்றனர் திறந்த நாளிலேயே இந்த பேரதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது இந்தப் பகுதியில் கு டிநீர் மேல்நிலை தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆனதால் பழைய தொட்டி சேதம் அடைந்ததை பார்த்தோம் ஆகையால் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று இந்த மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டப்பட்டது கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக பயன்பாட்டிற்கு வரவில்லை நான்கு நாட்களுக்கு முன்பாக தான் இந்த தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது அக்டோபர் ஏழாம் தேதி இந்த தொட்டியிலே வாட்டர் பம்ப் ஆப்ரேட்டர் உங்களுக்கு முன்னாடியே நாங்கள் பேசினோம் வாட்டர் போர்டு ஆபரேட்டர் மற்றும் ஊர் பொதுமக்கள் மேலே ஏறி பார்த்த போது மனித மலம் தான் என்பதை உறுதி செய்து மலம் என்பதை உறுதி செய்தார்கள்
தற்போது இந்த பகுதியிலே ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது இந்த சம்பவத்தை இந்த அரசாங்கம் மூடி மறைக்கிறது காவல்துறை அதிகாரிகளும் வருவாய் துறை அதிகாரிகளும் அங்கு முகாமிட்டு இருக்கிறார்கள் முகாமிட்டிருக்கிற அதிகாரிகள் இடத்திலே பொதுமக்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள் அது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த நிமிடம் வரை எங்களுக்கு கிடைத்த செய்தி எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படவில்லை எங்களுடைய ஒன்றிய கழகச் செயலாளர் தொடர்ந்து இந்த பகுதியிலே முகாமிட்டு அவரும் மக்களோடு மக்களாக இருந்து பணி செய்து வருகிறார் இதுவரை புகார் மனு எப்ஐ ஆர் பதிவு செய்யப்படவில்லை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா மகளிர் அணி செயலாளர் லட்சுமி அவர்களும் தொடர்ந்து கவுன்சிலர் தங்கபாண்டியன் ஆகியோரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் ஆனால் அரசு இதை மூடி மறைப்பதிலும் திசை திருப்புவதிலும் காட்டுகிற அக்கறை உண்மையான பிரச்சனை என்ன ஏற்கனவே வேங்கை வயல் பிரச்சனை அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது
ஆகையால் மலம் கலந்த விவகாரம் தற்போது பதட்டமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது இதற்கு உரிய நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுள்ளனர்
வாட்டர் பம்ப் பணியாளர் கேட்கிறார் சம்பந்தப்பட்டவர் யாராக இருந்தாலும் தவறு செய்தவர்கள் சட்டத்தை முன்பு நிறுத்தப்பட வேண்டும் உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இது ஒரு நியாயமான கோரிக்கை ஏற்கனவே வேங்கை வயல் பிரச்சினைகள் தலைகுனிவு ஏற்பட்டிருக்கிற நிலையிலே இந்த பிரச்சினையை கையாள்வதில் அரசு ஒரு பாரபட்சமாக இருக்கிறதோ இன்றைக்கு உள்ளூர் பிரச்சனையில் கவனம் செலுத்தாமல்
முதலமைச்சர் காசா போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவேன் என்று காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் சட்டசபையில் தீர்மானம் இயற்றுவோம் என்று பேசுகிறபோது சொல்லி இருக்கிறார் அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை
இங்கே நம்முடைய தமிழ்நாட்டிலே அவருக்கு வாக்களித்த மக்கள் அவர் முதலமைச்சராக இருக்கிறாரே இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று மக்கள் கேட்கிறார்கள்
அதேபோன்றுதான் இந்த சம்பவம் மட்டுமல்ல மதுரையிலே போலீசாரிடமிருந்து தப்பிய இளைஞர் கால்வாயில் விழுந்து உயிரிழந்தது
அடித்துக் கொன்றதாக பெற்றோர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் மதுரை அண்ணாநகர் அருகே யாகப்பா நகரை சேர்ந்த தினேஷ்குமார் வயது 31 அஜித் கண்ணா பிரகாஷ் ஆகிய மூன்று பேரை அண்ணாநகர் போலீசார் நேற்று அதிகாலை பிடித்து புறக்காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தார்கள் பின்னர் பின்னர் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு வாகனத்தில் அழைத்துச் சென்றபோது தினேஷ்குமார் திடீரென போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றதாகவும் அப்போது அவரை பிடிக்க முயன்ற போது அவர் அருகில் இருந்த வண்டியூர் உபரி நீர் செல்லும் கால்வாயில் குதித்து உயிரிழந்து உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அஜித் குமார் போன்று தினேஷ் குமாரின் உயிர் லாக்கப் டெத் மரணமாக நடத்தப்பட்டு இருக்கிறதா என்று பெற்றோர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இது மதுரையில் நேற்று நடந்த சம்பவம் ஆகவே சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடக்கிறது இப்போ என்ன தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய கவலை என்றால்எ.ன்ன நடக்கிறது தமிழ்நாட்டில் அப்படி என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி ஏற்பட்டுள்ளது
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று உறுதி மொழியை நாம் கடைபிடிக்கிற போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு வாழ்த்து செய்தியை வெளியிட்டார் அதை பத்திரிகைகளில் நீங்கள் செய்தியாக வெளியிட்டீர்கள்
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விலங்குகிறது என்ற பதிவை பதிவிட்டுள்ளார் ஆனால் இதில் கேடு என்னவென்றால் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவலர்களால் தாயின் கண் முன்னாலேயே ஒரு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ள சம்பவம் தான் அரங்கேறி உள்ளது
ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த மொழி தெரியாது ஊர் தெரியாது திருவண்ணாமலைக்கு பௌர்ணமிக்கு கிரிவலம் வந்தவர்கள் அவருடைய உறவினர் லாரியில் வந்தவர்கள் லாரியில் இருந்து இறக்கி டூவீலரில் ஏற்றிக்கொண்டு போயி யூனிபார்மை கழட்டி வைத்துவிட்டு கதற கதற கற்பழித்த இரண்டு காவலர்களை அந்த விசாரணையில் முடிவில் டிஸ்மிஸ் பண்ணி இருக்கிறார்கள் ஆனால் இந்த மாதிரி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் எங்கேயாவது நடந்திருக்கிறதா ஆகவே காவல்துறையில் இருக்கிற களைகளை களைய வேண்டிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கள்ள மவுனம் சாதிப்பதன் மர்மம் என்ன
காவல்துறை மானிய கோரிக்கையில் சுமார் 55 நிமிடம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யார் காவல்துறையின் கண்ணியம் கெட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார்
அன்றைக்கே நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவத்தை முதல்வர் தவிர்த்து இருக்கலாம் நடக்காமல் நிறுத்தி இருக்கலாம் அரசின் மீது அதை குற்றமாக பார்க்கிறாரே தவிர இதை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலே முதல்வர் செயல்படவில்லை
இதுபோன்ற அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி இங்கே திருவண்ணாமலையிலே வந்து கற்பழித்து காவல்துறை காக்கிகள் கற்பழிக்க கூடிய நிலைமை வேலியே பயிரை மேயக்கூடிய ஒரு சூழ்நிலையை நாம் பார்க்கிறோம்
ஆகவே இந்த விவகாரத்தில் காவல்துறை கள்ள மவுனம் காப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம் முதலமைச்சரும் அதற்கு வழிமொழிந்து அவரும் கள்ள மவுனம் காப்பதாக உள்ளது
இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி அவர்களின் கடும் கண்டனத்திற்கு பிறகு தான் திருவண்ணாமலை காவலர்களை முதலில் சஸ்பெண்ட் செய்தார்கள் தற்போது டிஸ்மிஸ் செய்துள்ளார்கள் ஆகவே இன்றைக்கு இதையெல்லாம் நாம் பார்க்கிற போது தமிழகம் தலைகுனிந்து இருக்கிறது ஆனால் தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன் என அவர் வீர வசனம் பேசி வருகிறார் விளம்பரப்படுத்தி கொள்கிறார் தனது ஆட்சி நிர்வாகத்தை விளம்பர வெளிச்சத்தில் நடத்தி வருகிறார் உண்மையிலேயே தமிழகம் தலை சாய்ந்து கிடக்கிறது முதுகெலும்பு உடைந்து கிடக்கிறது இதை மீட்டெடுப்பதற்கு நிர்வாகிகளிடம் கலந்து எடப்பாடி இடத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம் சட்டமன்றம் கூடுகிற நேரத்தில் இதுகுறித்து காவல்துறையிலேயே மரணம் அஜித் குமார் தினேஷ் குமார் எந்த குமாரா இருந்தாலும் இப்ப வந்து லாக்கப்ல போய்ட்டா சங்கு ஊதுறாங்க அதுவே காவல்துறை பொது மக்களுக்கு கொடுக்கிற பரிசு இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் அவர் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து முடிவெடுப்பார் இவ்வாறு பேசினார்


You must be logged in to post a comment.