நாலரைஆண்டுகளாக தொகுதிக்கு வராத எம்எல்ஏவுக்கு கிராம மக்கள் கடும் கண்டனம்,வாக்கு கேட்டு கிராமத்திற்கு வரக்கூடாது என எச்சரிக்கை
மதுரை சோழவந்தான் தொகுதி கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் மலம் கலந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த பொதுமக்கள் வெங்கடேசன் எம் எல் ஏ மீது சரமாரி குற்றச்சாட்டு கூறியுள்ளனர்
எம் எல் ஏ யார் என்றே தெரியாது என்றும் அவரைப் பார்த்து நாலு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதாகவும் கழிப்பறை வசதி குடிநீர் வசதி பேருந்து வசதி உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாமல் மிகுந்த சிரமப்படுவதாகவும் இதுகுறித்து சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கண்டு கொள்ளவில்லை என சரமாரியாக புகார் தெரிவிக்கின்றனர்
எங்கள் கிராமத்திற்கு இனிமேல் எம்எல்ஏ ஓட்டு கேட்டு வரக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழக முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது முதலில் அது மலம் இல்லை பெயிண்ட் என கூறிய வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்
இந்த நிலையில் அரசு அதிகாரிகள் சுகாதாரத் துறையினர் வருவாய்த்துறையினர் காவல்துறையினர் உள்ளிட்டோர் இரவு முழுவதும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை ஆய்வு செய்து மலம் கலந்த குடிநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்
கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முழுவதும் குடிநீரை நிரப்பி ஐந்து முறைக்கு மேல் குடிநீரை வெளியேற்றி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
இன்று காலை குடிநீர் மேல்நிலை தொட்டியின் கீழ் பகுதி மற்றும் அருகில் இருந்த பகுதிகளை சுத்தம் செய்வதற்காக அம்மச்சியாபுரம் பொம்மன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 100 நாள் வேலை பார்க்கும் பெண்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது அங்கிருந்தவர்கள் கூறுகையில் எங்களுக்கு நல்ல தண்ணீர் என்பதே கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இல்லை குடிநீர் வசதியும் இல்லை கழிப்பறை வசதியும் இல்லை பேருந்து வசதியும் இல்லை மகளிர் இலவச பேருந்து என்பது என்னவென்றே எங்களுக்கு தெரியாது நான்கு ஆண்டுகளாக அரசு பேருந்துக்காக மூன்று கிலோமீட்டர் முதல் 5 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று வெளியூர்களுக்கு சென்று வருகிறோம் இது குறித்து தொகுதி திமுக எம்எல்ஏவான வெங்கடேசனிடம் பலமுறை தெரிவித்து விட்டோம் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை
பெரியார் பேருந்து நிலையம் டு அம்மச்சியாபுரம் என்ற போர்டு சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் இருப்பதாக சொல்கிறார்கள் ஆனால் அந்த பேருந்தை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை
மாலை நேரங்களில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறோம் அப்போது இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் வெளியூரிலிருந்து எங்கள் பகுதிக்கு வருபவர்கள் வரும்போது
எந்திரிச்சு நிக்க வேண்டிய அவல நிலை இன்னும் ஏற்பட்டு வருகிறது இதை சொல்லவே நா கூசுகிறது அந்த அளவிற்கு எங்கள் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் மோசமான நிலையில் உள்ளது
சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ ஓட்டு கேட்கும் போது எங்கள் ஊருக்கு வந்தார் பின்னர் நன்றி சொல்ல வந்ததாக எல்லாரும் கூறுகிறார்கள் ஆனால் நாங்கள் யாரும் பார்க்கவில்லை கடந்த ஐந்து ஆண்டுகளாக எம்எல்ஏ வை பார்க்கவும் இல்லை அவர் யார் என்றும் எங்களுக்கு தெரியாது ஓட்டு கேட்டு வரும் போது கூட்டமாக வருவார்கள் இவர்தான் வேட்பாளர் என்று கூறுவார்கள் அதற்குப் பிறகு எங்களை சந்திக்கவோ எங்கள் குறைகளை கேட்கவோ எந்த நாதியும் இல்லை ரேஷன் கடைகளில் முறையாக பொருட்கள் வழங்குவதில்லை நாங்கள் பெண்கள் கூலி வேலைக்கு சென்று விடுவதால் வீட்டில் உள்ள ஆண்களை ரேஷன் கடைக்கு அனுப்பினால் பொருட்கள் வழங்க மறுக்கிறார்கள்
ஆகையால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இந்த கிராமங்களுக்கு அரசு உடனடியாக அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் குடிநீரில் மலம் கலந்தவர்கள் யார் என்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை சட்டமன்ற உறுப்பினரோ அமைச்சரோ மாவட்ட கலெக்டரோ எங்கள் கிராமத்திற்கு வரவில்லை
இது எங்களுக்கு மிகுந்த வேதனையையும் அவமானத்தையும் ஏற்படுத்துகிறது அவர்கள் எப்போது வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் இவ்வாறு கூறினர்


You must be logged in to post a comment.