மதுரை ராஜாக்கூரில் இருந்து பெரியார்நிலையம் நோக்கி புதூர்கிளையைச் சேர்ந்த அரசுப்பேருந்து வந்துகொண்டு இருந்தது.பேருந்தின் கண்டக்டர் கணேசன் பயணிகளிடம் டிக்கெட் தந்துவந்தார். பேருந்து கருப்பாயூரணி அருகே வந்தபோது டிக்கெட் எடுப்பதில் பயணிகள் இருவருக்கும் கண்டக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.வாக்குவாதம் முற்றி கண்டக்டர் கணேசனை தாங்கள் கொண்டுவந்த பயங்கரமான ஆயுதங்களால் பயணிகள் இருவரும் தாக்கியுள்ளனர். நெற்றில் விழுந்த வெட்டால் இரத்தம் வழியத் துடிதுடித்த கண்டக்டர் கணேசன், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்கிவிட்டு தப்பியோடிய இருவரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

You must be logged in to post a comment.