மேலக்கால் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்கள் மூலம் பல லட்சம் ரூபாய் முறை கேடுகள் நடப்பதாக புகார்

மேலக்கால் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்கள் மூலம் பல லட்சம் ரூபாய் முறை கேடுகள் நடப்பதாக புகார் மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் மேலக்கால் கச்சிராயிருப்பு
கீழ மட்டையான் பொட்டல்பட்டி சிவநாதபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இவர்களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு குழுக்களாக பிரிந்து பணி செய்து வருகின்றனர் இவர்களுக்கு பணி வழங்கும் ஊராட்சி நிர்வாகம் உள்ளூர் திமுக நிர்வாகிகளின் கைக் கூலியாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் மத்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது குறிப்பாக 100 நாள் வேலை பார்க்கும் பொது மக்களை நிர்வகிக்கும் பணித்தள பொறுப்பாளர்கள் 100 நாட்களுக்கு ஒருவர் வீதம் திமுக நிர்வாகிகளின் குடும்பத்தினரை நியமித்து அவர்கள் மூலம் ஒரு ஒவ்வொரு பணித்தள பொறுப்பாளரும் 50க்கும் மேற்பட்ட 100 நாள் அட்டைகளை தங்கள் வசம் வைத்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு சென்றுள்ளதாக கூறப்படுகிறது அதாவது ஒரு குழுவிற்கு 100 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்ற விதிமுறையில் 20 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து 100 நாட்களுக்கு பணி வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த ஐந்து குழுக்களுக்கும் பணித்தள பொறுப்பாளர்களை திமுக நிர்வாகிகளின் குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மூலம் 100 நாள் பணிகளுக்கு வராதவர்களுக்கு அட்டை வழங்கப்பட்டு அட்டை முழுவதையும் பணித்தள பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பணித்தள பொறுப்பாளரும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்களின் பண வரவுகளை சம்பந்தப்பட்ட அட்டைதாரர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி அவர்கள் மூலம் எடுத்து வர செய்து முறை கேட்டில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களின் ஜாப் கார்டுகள் மூலம் பண வரவு செலவுகள் எவ்வாறு நடைபெற்று உள்ளது பணிக்கு வராதவர்களுக்கு பணம் சென்றுள்ளதா என்று உரிய விசாரணை செய்தும் ஆய்வு செய்தும் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஒன்றிய ஆணையாளர் உள்ளிட்டோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!