சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை
கண்டதேவி சாலையில்
வாரச்சந்தை நடைபெறும்.
அக்டோபர் 5ஆம் தேதி
மதியம் பலத்த காற்றுடன் மழை பெய்தது உழவர் சந்தையில் மீன் வியாபாரம் செய்த பாசி பட்டணத்தை சேர்ந்த சுப்பையா மனைவி லட்சுமி மரம் சாய்ந்து விழுந்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
மற்றும் மூன்று பெண்கள், ஒரு நபர் காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .மலையுடன் சூறைக்காற்று வீசியதில் உழவர் சந்தையில் தகரக் கூரைகளும் சாய்ந்தது நான்கு சக்கர வாகனமும் சேதம் அடைந்தது.
சம்பவம் அறிந்து நகர காவல் துறையினர், மற்றும் தீயணைப்புத் துறையினரும், விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மரம் சாய்ந்து பலியான பெண்ணின் உடலை கைப்பற்றி தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்தில் தீயணைப்பு மீட்பு துறை ,நகராட்சி பணியாளர்களும் மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். நகர் மன்றத் துணைத் தலைவர் ரமேஷ் , அப்பகுதி வார்டு கவுன்சிலர் தகவல் அறிந்து சம்பவ இடத்தில் உடன் இருந்தனர். காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி பார்வையிட்டார்.


You must be logged in to post a comment.