சோழவந்தான் ஸ்ரீ பிரளயநாதசிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளயநாதசிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள விசாக நட்சத்திரத்துக்குரிய திருக்கோவிலான அருள்மிகு ஸ்ரீ பிரளயநாத சுவாமி கோவிலில் சனி மகா பிரதோஷம் நடைபெற்றது. நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் இளநீர் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து ரிசப வாகனத்தில் சுவாமி அம்பாள் இருவரும் திருக்கோவிலை சுற்றி வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் நமச்சிவாயா ஓம் நமசிவாய என்று மனமுருக வேண்டி வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை எம்.வி எம் குழும தலைவர் மணிமுத்தையா கலைவாணி பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் பள்ளி நிர்வாகி வள்ளி மயில் மணி முத்தையா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!