மதுரை தெற்கு மாவட்டம் தி மு க உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி பாகமுகவர்கள் பிளாக் 2 ஆலோசனை கூட்டம் மாதரை அருகே தேனி ரோட்டில் உள்ள ஆர் எஸ் டி செல்வ தமிழரசி மஹாலில் நடைபெற்றது.
உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு. மணிமாறன் தலைமையில் வணிகவரி அமைச்சர் பி. மூர்த்தி ,தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி தொகுதி பொறுப்பாளர் செல்லத்துரை நகர செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் ஒன்றிய செயலாளர்கள் உசிலம்பட்டி எஸ் வி எஸ் முருகன் எம் பி. பழனி அஜித் பாண்டி செல்லம் பட்டி சுதாகரன் முத்துராமன் சேடபட்டி ஜெயச்சந்திரன் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் இளமகிழன் பொதுக்குழு உறுப்பினர் சரவணக்குமார் வழக்கறிஞர் ராஜசேகர் விவசாய அணி மோகன் இளைஞரணி சுஜேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் முதலமைச்சர் ஆக மு க ஸ்டாலின் பதவி ஏற்கும் பொழுது உசிலம்பட்டியில் உதய சூரியன் உதிக்கும். அதற்குத் தகுந்தவாறு அனைவரும் திமுக வெற்றி பெற்ற உழைக்க வேண்டும் என கூறினார்.


You must be logged in to post a comment.