சோனியா காந்தி எம் பி , ராகுல் காந்தி எம்.பி , அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோர் ஆணையின்படி விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் , ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் ஆகியோரின் ஆலோ சனையின் பேரில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாண்டியன் ,உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் தலைவராக மாநில பொதுக்குழு உறுப்பினர் டி. சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சரவணகுமார் பாரம்பரியம் உள்ள காங்கிரஸ் பேரியக்கத்தில் பற்று கொண்ட தியாகி பி.அன்னக்கொடி தேவர் பேரன் ஆவார்.தியாகி அன்னக்கொடி தேவர் அவர்கள் இல்லத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களும் வருகை தந்து தங்கி சென்றுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.இவரது பெரியப்பா கே என் ஏ நடராஜன் பெருந்தலைவர் காமராஜர் உசிலம்பட்டி சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டு போட்டியிட்டவர் ஆவார்.
கம்பம் சட்டமன்ற உறுப்பினராகவும் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி தலைவராகவும் பணியாற்றிய ஓ.ஆர். ராமச்சந்திரன் மருமகன் ஆவார்.
இவர் நீண்ட காலமாக விளையாட்டுத்துறையில் ஆர்வமுடன் இளைஞர்களை ஊக்குவித்து பயிற்றுவித்து வருகின்றார். இவர் நியமனம் செய்யப்பட்டதை உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ்,இளைஞர் காங்கிரஸ்,மகளிர் காங்கிரஸ், டி என் எஸ் டி சி ஐ என் டி யு சி தொழிற்சங்க பிரிவு, சேவாதள பிரிவு, வர்த்தக பிரிவு, சிறுபான்மையினர் பிரிவு மற்றும் செயல் வீரர்களும் அன்புடன் ஆரவரத்துடன் வரவேற்று மகிழ்கின்றனர் .இவர் தேனி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக திறம்பட பணியாற்றியவர்.


You must be logged in to post a comment.