சோழவந்தான் பசும்பொன் நகரில் இடப்பிரச்சனையில் நீதிமன்ற உத்தரவு இருந்தும் காவல்துறை உதவியுடன் மிரட்டப்படுவதாக இடத்தின் உரிமையாளர் பரபரப்பு புகார் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பசும்பொன் நகரில் வசித்து வருபவர் சிவசங்கர பாண்டியன் இவரது மனைவி நாகேஸ்வரி இவர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் காலியிடம் பசும்பொன் நகரில் உள்ளது. அதில் இவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள பச்சையம்மாள் மற்றும் அவரது மகள் ரம்யா ஆகியோர் அபகரிப்பு செய்து இவர்களிடம் தொடர் பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளனர் மேலும் இவர்களை தகாத வார்த்தைகளால் பேசியும் அவதூறு பரப்பியும் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் பல்வேறு முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும எடுக்கவில்லை என கூறுகின்றன .இதனால் பாதிக்கப்பட்ட நாகேஸ்வரி வாடிப்பட்டி உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்து வழக்கின் அடிப்படையில் அந்த இடம் நாகேஸ்வரி என்பவருக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நாகேஸ்வரியிடம் பிரச்சனை செய்யக்கூடாது என நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி சோழவந்தான் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி பிச்சையம்மாள் அவரது மகள் ரம்யா ஆகியோர் அந்த இடத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பொருட்களை வைத்ததாக கூறப்படுகிறது அதனை தட்டி கேட்ட நாகேஸ்வரியை சிலாப் கற்களை கொண்டு தாக்கி உள்ளனர். இது குறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துஉள்ளார் ஆனால் சோழவந்தான் காவல்துறையினர் இருதரப்பினரிடம் புகாரை பெற்று இருதரப்பின் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என கூறுவதாகவும் பாதிக்கப்பட்ட எங்களை எதிர் தரப்பினரை வைத்து மிரட்டுவதாகவும் காவல்துறையினர் மீது புகார் தெரிவிக்கின்றனர் மாவட்ட எஸ்பி டிஎஸ்பி மனித உரிமைகள் கழகம் என பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் இதுவரை பாதிக்கப்பட்ட எங்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை மேலும் நீதிமன்ற உத்தரவை பெற்றும் எங்களது இடத்தில் அத்திமீறி நுழைப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை ஆகையால் தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு இதுகுறித்து மனு அளிக்க இருக்கிறேன் தமிழக முதல்வர் எங்களுக்கு உரிய தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர் தொடர்ந்து காவல்துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து செய்வோம் என மிரட்டுவதாகவும் கூறுகின்றனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!