சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் தனிநபர் வீட்டிற்கு செல்லும் பாதையை மறைத்து அங்கன்வாடி கட்ட முயற்சி மாவட்ட ஆட்சியர் தலையிட கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர் சுசிலா ரவிக்குமார் இவர் தமிழ்நாடு விவசாய சங்கத்தில் முள்ளிப்பள்ளம் கிளை செயலாளராக உள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் முள்ளிப்பள்ளம் சங்கையா கோவில் அருகே வீடுகட்டி வசித்து வருகிறார். அந்த வீட்டிற்கு செல்லும் பாதையை திடீரென மறைத்து முள்ளிபள்ளம் மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மையத்தை மாற்றும் நோக்கில் கட்டிடம் கட்ட சுசிலா ரவிக்குமார் வீட்டை மறைத்து பேஸ்மென்ட் அமைக்க குழி தோண்டி உள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சுசிலா ரவிக்குமார் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடமும் வட்டார வளர்ச்சி அலுவலர் இடமும் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்களிடம் முறையிட்டார் ஆனால் வீட்டை மறித்து அப்படித்தான் கட்டுவோம் என்று குழி தோண்டி உள்ளனர் இதுகுறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வாகம் நேரடியாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட சுசிலா ரவிக்குமார் பாதிக்கப்படாத வகையில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் மேலும் அங்கன்வாடி மையம் அமைக்கும் இடத்தில் ராட்சத டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் தெரிவிக்கின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!