அதிமுகவை குறைத்து மதிப்பிடாதீர்கள் துணை முதல்வர் அவர்களே… முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் மற்றும் தென்கரை பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி பொறுப்பாளர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசும்போது கூறியதாவது
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படாமல் முடக்குகிறது. அதிமுக தலைமை கட்டளையிட்டால் புளியை புள்ளாக நினைத்து பிடுங்கி எரியும் ஆற்றல் பெற்றவர்கள். சாணியை சாமியாகவும் சாமியை சாணியாகவும் மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள். பூத் கமிட்டி உறுப்பினர்கள்
இளைஞர்களை சந்திக்கும் போது அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதையும் நமது ரத்த உறவுகள் என்ன கூறுகிறார்கள் என்பதையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். முன்னாள் தமிழக முதல்வர் பொங்கல் பரிசு 2500 ரூபாய் 2 கோடியே 18 லட்சம் பேருக்கு வழங்கினார்கள் மகளிர் உதவித்தொகையினை உரிமை தொகை என்று கூறுகிறார்கள் விடியல் பயணம் என்று சொல்கிறார்கள் ஆனால் அதில் போகும் உயிர்களுக்கு உத்திரவாதம் இல்லை என்றும் சொல்கிறார்கள் தேர்வுக்கு முன்பு எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்கிறார்கள் தேர்தல் முடிந்த பின்பு தகுதி வாய்ந்த நபர்களுக்கு என்று மட்டும் சொல்கிறார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் ஒரு பவுன் தங்கக்காசு தாலிக்கு தங்கம் பட்டுப்புடவை மற்றும் தீபாவளி பொங்கலுக்கு பட்டு சேலைகள் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 52 லட்சம் பேருக்கு வழங்கிய மடிக்கணினி யாருக்கும் வழங்கவில்லை. திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிவிட்டு சொத்து வரி வீட்டு வரி உயர்வு மின்சார கட்டணம் அதிகமாக உயர்த்தி விட்டார்கள்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களே அதிமுகவை குறைத்து மதிப்பிடாதீர்கள் உங்கள் தாத்தா குறைத்து மதிப்பு செய்ததால் தான் 13 வருடங்கள் வனவாசத்தில் இருந்தார். உங்கள் அப்பா குறைத்து மதிப்பிட்டதால்தான் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கூட கிடைக்காமல் இருந்தார் நீங்கள் குறைத்து மதிப்பீட்டால் காணாமல் போகும் சூழ்நிலை ஏற்படும் இவ்வாறு பேசினார்


You must be logged in to post a comment.