வராத எம்எல்ஏ. தாமதமாக வந்த எம்பி.. துணை முதல்வர் உதயநிதி நிகழ்ச்சியில் நடைபெற்ற கூத்து

தேனூர்அருகே கட்டப்புலி நகர் பகுதியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை தொகுதி எம்எல்ஏ இல்லாமல் பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எம் பி யும் தாமதமாக வந்ததால் கண்டுகொள்ளாத நிலை

தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தேனூர் ஊராட்சிக்குட்பட்ட கட்டப்புளி நகர் கிராமத்தில் 6.75 ஏக்கர் பரப்பளவில் தேனூர் கிராம மக்கள் 119, வீடில்லாத வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் 117 , மாற்றுத்திறனாளிகள் 128, திருநங்கைகள் 37 பேர் என 401 பேருக்கு அரசு செலவிலேயே மூன்று லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 360 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் கூடிய வீடு கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக 195 பேருக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது மீதமுள்ள 206 பேருக்கு வரும் ஜனவரி மாதத்திற்குள் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படுவதாகதெரிவிக்கப்பட்டது

.இந்த நிலையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆய்வுப் பணிகள், கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக விருதுநகர் மற்றும் மதுரை நிகழ்வுகளில் பங்கேற்றுஇன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்சோழவந்தான் அருகே உள்ள வாடிப்பட்டியில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்தார் வரும் வழியில் தேனூர் ஊராட்சி கட்டப்புளி நகரில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை பார்வையிட்டார்.அவருடன் அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் வந்திருந்தனர். ஆனால் சோழவந்தான் தொகுதி திமுக எம்எல்ஏவான வெங்கடேசன் துணை முதலமைச்சர் ஆய்வு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை அதனை எடுத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட நிலையில் தேனீ தொகுதியின் திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்தார் வந்தவர் நேராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க ஆய்வு செய்யும் இடத்தில் சென்றார் ஆனால் தங்கள் தமிழ் செல்வன் எம்பி உதயநிதி ஸ்டாலின் கண்டு கொள்ளாத உள்ளே சென்ற சிறிய நேரத்தில் வெளியே வந்து தனியே நின்று கொண்டார் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் துணை முதல்வர் ஆய்வு மேற்கொள்ள வரும் நிலையில் சம்பந்தப்பட்ட தொகுதி எம்எல்ஏ இல்லாத நிலையில் தொகுதி எம் பி யும் தாமதமாக வந்ததால் எம் எல் ஏ மற்றும் எம் பி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கவில்லையா அல்லது துணை முதல்வர் வருவதை அறிந்து வேண்டுமென்றே புறக்கணித்தார்களா என அங்கிருந்த நிர்வாகிகள் பேசிக்கொண்டனர் மேலும் துணை முதல்வர் உடன் வந்தவர்கள்கட்சியினர் உதயநிதி ஸ்டாலினிடம் சென்று செல்பி எடுக்கச் சென்ற போது அவர்களை புகைப்படம் எடுக்க விடாமல்பிடித்து தள்ளிவிட்டுக் கொண்டே சென்றனர் செய்தியாளர்களையும் அருகில் வர வேண்டாம் தள்ளி நின்று எடுங்கள் என கூறிக் கொண்டே சென்றனர் துணை முதல்வர் ஆய்வு பணிக்காக வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் அந்நியமாகவும் அநாகரிகமாகவும் நடந்து கொண்ட சம்பவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது இனிவரும் காலங்களில் ஆவது மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் ஒன்றிணைந்தும் செய்தியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தும் செயல்பட வேண்டுமென அங்கிருந்தவர்கள் பேசி சென்றனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!