சோழவந்தான் அரசு மருத்துவமனையில் 3.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தினசரி 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு உள் மற்றும் புற நோயாளிகளாக வந்து தங்களின் நோய்களுக்கு உரிய சிகிச்சை பெற்று செல்கின்றனர் தற்போது மருத்துவமனைக்கு பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அதிகம் வரும் காரணத்தினால் மருத்துவமனைக்கு கூடுதல் மற்றும் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் தொடர்ச்சியாக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர் இதனையடுத்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என கூறியிருந்தார் இதன் அடிப்படையில் சுமார் 3.5 கோடி மதிப்பில் மருத்துவமனைக்கு
கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை தாங்கினார் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் துணைத் தலைவர் லதா கண்ணன் மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆறாவது வார்டு செயலாளர் ரவி விவசாய அணி சந்திரன் கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர் மருத்துவமனை சார்பில் தலைமை மருத்துவர் தீபா மாவட்ட மருத்துவ பணிகள் இணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் ஹரிஹரன் உதவி பொறியாளர் ஆர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர் சுமார் 700 சதுர மீட்டரில் இரண்டு தளங்களை கொண்ட மருத்துவமனை கட்டப்படும் எனவும் இதில் பிரசவ வார்டு ஈசிஜி எக்ஸ்ரே வார்டுகள் மற்றும் குழந்தைகள் சிறப்பு வார்டு சமயலறை மற்றும் நோயாளிகளுக்கான கவுன்சிலிங் பகுதி உள்ளிட்டவைகள் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் கூறுகையில் மருத்துவமனையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன் போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்களை நியமிக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளை நீண்ட நேரம் காக்க வைக்காதவாறு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!