தமிழ்க அரசு நடந்து முடிந்த சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் மறைந்த முன்னாள் எம். பி.யும்,முன்னாள் எம்.எல்.ஏவுமான பி.கே மூக்கையாத்தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மணிமண்டபம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு இதன்படி உசிலம்பட்டியில் உள்ள பள்ளி கல்வித் துறைக்குச் சொந்தமான பழைய அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளயில் மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசு தேர்வு செய்த இடத்தில் பாதி கள்ளர் கல்வி கழகத்திற்கு சொந்தமான பழைய மாணவர் விடுதி உள்ளது. இதனால் அந்த இடத்தில் மறைந்த முன்னாள் எம்.பியும் எம்.எல்.ஏவுமான மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க கூடாது என வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் பார்வர்ட பிளாக் கட்சியினர் (சுரேந்திரன); மற்றும் கள்ளர் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மூக்கையாத்தேவர் மணிமண்டபம் கட்ட அவ்விடத்தில் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி துவங்கியது. அரசு அதிகாரிகள், டி.எஸ்.பி மற்றும் போலிசார் தி.மு.க கட்சி நிர்வாகிகள் அவ்விடத்தில் குவிந்தனர்;.பழைய கள்ளர் மாணவர் விடுதியை இடிக்க முற்பட்டபோது பார்வர்ட் பிளாக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கள்ளர் கல்விக்கழகத்திற்கு சொந்தமான பழைய மாணவர் விடுதியை இடிப்பதற்கு அரசாணை எங்கே செய்தறியாவது திகைத்த அதிகாரிகள் நாளை தருவதாக கூறிவிட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு சொந்தமான பழைய அரசு பள்ளி கட்டிடத்தை மட்டும் இடிக்கும் பணியை தொடர்ந்தனர் . கள்ளர் கல்விக்கழகத்திற்கு சொந்தமான பழைய மாணவர் விடுதியை இடிக்க கூடாதென்று பார்வர்ட் பிளாக் கட்சியினர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் பழைய அரசு பள்ளி கட்டிட இடத்தில் மட்டும் மணிமண்டபம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றது.
இன்று அதிகாலை . நேதாஜி , ஃபார் வர்ட் பிளாக் கட்சி நிர்வாகி மற்றும் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்கத்தினர் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர் அப்போது அவ்வழியாக வந்த வகுரணி அரசு டவுன் பஸ் மீது நேதாஜி என்பவர் பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இதனால் பரபரப்பாக காணப்பட்ட சூழலில் போலீசார் நேதாஜியை கைது செய்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உசிலம்பட்டி தேவர் சிலை வளாகப் பகுதிகளிலும், மணிமண்டபம் கட்ட இடிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.