மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட நேதாஜி நகரைச் சேர்ந்தவர்கள் தங்கராஜ் – பவளக்கொடி தம்பதி, 86 வயதான தங்கராஜ் தலைமை காவலராக இருந்து ஓய்வு பெற்றுள்ளதாகவும், பவளக்கொடி இல்லத்தரசியாக இருந்தாக கூறப்படுகிறது.,
இந்த தம்பதிகள் திருமணமான நாளிலிருந்து இருவரும் இணைந்தே இல்ல விழாக்கள், கோவில்களுக்கு சென்று வருவது, குழந்தைகளிடம் அன்பு செலுத்தி வாழ்ந்து வந்துள்ளனர்.,
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மனைவி பவளக்கொடி தனது 76 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார், மனைவி இறந்த சோகத்தில் இருந்த தங்கராஜ் இன்று காலை மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.,
மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரை விட்ட சம்பவம் இறப்பிலும் இணை பிரியாத தம்பதியாக இருவரது உடல்களையும் உறவினர்கள் அஞ்சலிக்காக வீட்டின் முன்பு வைத்துள்ளனர்.,
உறவினர்களும் இருவரது உடலுக்கும் அஞ்சலி செலுத்தி வரும் சூழலில், இறப்பிலும் ஒன்றாக இணைந்த இந்த தம்பதிகள் நெகிழ்ச்சியுடன் கலந்த சோகத்தை ஏற்படுத்தி சென்றுள்ளனர்.,