மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் உள்ள சங்கையா ஊர்காவலன் சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 100 ஆண்டுகளுக்கும் மேலானதாக கூறப்படுகிறது இந்த கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை தற்போது உள்ள யாரும் பார்க்கவில்லை எனவும் கூறுகின்றனர் இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேக நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட இருந்த நிலையில் கோவில் முன்பு இருந்த பெரிய மரம் அதற்கு இடையூறாக இருப்பதாக கூறி அதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் இதனை அடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்ட அதிகாரிகள் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிச் சென்றனர் இந்த நிலையில் மரத்தை அகற்றுவதற்கான அனுமதி தரப்பட்ட நிலையில் நேற்று கோவில் முன்பு இருந்த மரம் அகற்றப்பட்டது இதனால் சங்கையா ஊர்க்காவலன் சாமி கோவில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் துவங்கும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது மரத்தை அகற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
