மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒருபோக விவசாய பாசனத்திற்காக 19000 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் அணைப்பட்டி பேரணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் பாசன கோட்ட விவசாய சங்க தலைவர் ராமன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர். விக்கிரமங்கலம், கொடிக்குளம் குறவக்குடி உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 19,000 ஏக்கர் வாசன வசதி பெறுகிறது. ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்து பூஜை செய்து பூத்தூவி வழிபாடு செய்தனர். தற்போது ஒருபோக விவசாயத்திற்காக செப்டம்பர் 15ஆம் தேதி திறக்க வேண்டிய நீர் இரண்டு நாள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளது. விவசாய தேவைகளுக்காக உரம் பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருள்களை தட்டுப்பாடு ஏற்படாமல் வழங்க வேண்டும். பாசன கால்வாய்கள் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். திறக்கப்பட்ட தண்ணீர் 120 நாள் வழங்கப்படும். முதல் 40 நாட்கள் தடையின்றியும் 40 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை முறை வைத்தும் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி. திருமங்கலம் பாசன கோட்டம் விவசாய சங்கம் பகவான், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உதவி செயற்பொறியாளர் பூமிநாதன். மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோவிந்தராஜ் ராதாகிருஷ்ணன் செல்லையா பாசன விவசாய சங்கப் பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் சமூக நல ஆர்வலர்கள் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
