மதுரை அருகே கோவில் பாப்பாக்குடி பி ஆர் சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல். இவர் தனது வீட்டின் முன்பாக அருகே மின்சார வயர் செல்வதால் அதனை இடமாற்ற கூறினார். கூடல் நகரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மின் வயரை இடம் மாற்றம் செய்ய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார் மின்சார வாரியத்தில் போர்மனாக பணியுரையும் கணேசன்.லஞ்சம் தர விரும்பாத சாமுவேல் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை சாமுவேல் மின்வாரிய போர் மேன் கணேசனிடம் அவரது வீட்டில் முன்பாக வைத்து வழங்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கணேசனை கையும் களவுமாக பிடித்தனர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
